கொழும்பு நகரில் கொவிட் 19 இன் மற்றொரு பெரிய அலைக்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்திற்குள் தொற்றுநோய் மீண்டும் வருவதற்கான பெரிய ஆபத்து எதுவும் இல்லை, குறிப்பாக ஓமிக்ரான் தோன்றிய பின்னர், பெருந்தொகையான நகர மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்” என்று மருத்துவ அதிகாரி கூறினார்.
தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து (IDH) நிலைமை குறித்த புதுப்பிப்பை நான் பெற்றுள்ளேன், கடந்த சில நாட்களில் ஒவ்வொரு 50 வயதானவர்களில் ஒருவர் பொசிட்டிவ் இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்,ஆகையால் பெரிதான ஆபத்து ஒன்றுமில்லை
இருப்பினும், சுகாதார அமைச்சக வட்டாரங்களின்படி, கடந்த வாரம் சுமார் 150 தொற்றுநோய் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த, மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனையின் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது என கூறியிருந்தார்.