சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட சலுகைகள்!

Date:

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறையின் பதில் அமைச்சர் சாந்த பண்டார இந்த விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்கள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

AI Impact 2026: ஜனாதிபதி அனுரகுமார பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது...

நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும்...

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான மழை.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

AI பாதக விளைவுகளிலிருந்து கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பு தேவை: டெல்லியில் ஜனாதிபதி அநுர உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு...