எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

Date:

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று  நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

66-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன.

அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஆண்ட்ரூ மீது இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே இந்த கைது என்கிறது பிரிட்டன் ஊடக செய்திகள்.

இளவரசர் ஆண்ட்ரூ பிரிட்டனின் வர்த்தகத் தூதராக பணியாற்றியபோது (2001-2011), அரசு ரீதியான ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு, எப்ஸ்டீன் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணுடன் ஆண்ட்ரூ பாலியல் தொடர்பில் இருந்ததாகவும், இதற்காகப் பொது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் Thames Valley காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...