எகிப்தில், கெய்ரோ சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போதுதேசிய சுற்றாடல் கொள்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவித்தார்
கிளாஸ்கோவில் நடந்த கோப் – 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.