ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

Date:

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...