பற் சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்பான ‘ஒரம்’ நிறுவனத்தின் தலைமையகம் தெஹிவளையில் திறப்பு!

Date:

பற்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ உபகரணங்களை இலங்கை பற்சிகிச்சை மருத்துவ துறைக்கு விநியோகிக்கும் முன்னணி நிறுவனமான ‘ஒரம்’ உலகலாவிய தனியார் நிறுவனம் அதன் தலைமையகத்தை தெஹிவளை, பெப்பிலியான, நெதிமால, இலக்கம் 92 இலக்கக் கட்டடத்தில் கோலாகலமாகத் திறந்து வைத்துள்ளது.

‘ஒரம்’ உலகளாவிய தனியார் நிறுவனத்தின் தலைவர் ஜாபிர் சாலி, உலகலாவிய நிறைவேற்று பணிப்பாளர் முஸ்தாக் ஜாபிர் ஆகியோர் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் இந்தியாவில் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் பல்தேசிய நிறுவனமான கமல் என்கொன் இன்டஸ்ட்ரீஸின் பணிப்பாளர் விக்ரம் பிரதாப்காத், வதிவிட முகாமையாளர் முஹம்மட் அலி கட்ரி, பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் டொக்டர் நீட்டா செட்டி உள்ளிட்டோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய நிறுவனத்தின் உலகலாவிய நிறைவேற்று அதிகாரி முஸ்தாக் ஜாபிர்,

ஒரம் உலகலாவிய தனியார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட பின்னணி குறித்தும் இந்நிறுவனம் அடைந்துள்ள வளர்ச்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

‘பற்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்து இந்நாட்டு சந்தைக்கு நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.

அத்தோடு பல் வைத்தியர்களுக்கும் பற்சிகிச்சை மருத்துவர்களுக்கும் பற்சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அறிமுகப்படுத்தும் வகையில் சான்றிதழ் கற்கைகளை முன்னெடுக்கின்றோம்.

இக்கற்கைகளுக்கான வளவாளர்களாக நவீன பற்சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான முன்னணி பல் வைத்தியர்களைக் கொண்டு செயன்முறையுடன் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

எமது பயணத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் இந்தியாவின் கமல் என்கொன் இன்டஸ்ட்ரீஸ், கமல் மெடிக் டெக் என்பன எம்முடன் கைகோர்த்திருப்பதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

இது எமது நிறுவனத்திற்கும் இந்நாட்டின் நவீன பற்சிகிச்சைக்கும் ஓர் மைற்கல்லாகும். இதன் ஊடாக இந்நாட்டின் பற்சிகிச்சை மருத்துவ துறை மேலும் நவீனமயமாகும் என்றார்.

‘இவ்வாறான நவீன துறைகளை பாராட்டி ஊக்குவிப்பது காலத்தின் அவசியத் தேவை என்றும் இப்பணியை முன்னெடுக்கும் நிறுவனத்தின் தலைவர், உலகலாவிய நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களையும் வாழ்த்திப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகில காரியவசம் உரையாற்றும் போது கூறினார்.

இதேவேளை, நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பற்சிகிச்சை நிலையமும் இத்தலைமையகக் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தின் போது ஒரம் நிறுவனத்தின் தலைவரும், உலகலாவிய நிறைவேற்று அதிகாரியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், கமல் என்கொன் இன்டஸ்ட்ரீஸின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். பல் வைத்தியர்கள் உட்பட துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...