மன்னாரில் யுத்தத்திற்கு பின் மீளக் குடியேறிய மக்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன!

Date:

யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டம் இன்று மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் கையளிக்கப்பட்டன.

பூரணத்துவம் அடையாத நிலையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய  குவைட் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (Zakath House) நிதியுதவியோடு ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எறுக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனினின் (Zakath Foundation) பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகள் இவ்வாறு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு குறித்த வீடுகளை கையளித்தனர்.

இதேவேளை தலா 13 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரென்லி டீமெல், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆர். சூரிய ஆராய்ச்சி, மன்னார் பிரதேச செயலகப் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப்,  நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஏ. மிஹ்லார்,  நாட்டின் இலங்கைக்கான தூதுவரின் இணைப்பாளர், மன்னார் பிரதேசச் சபைத் தலைவர், பிரதேசச் சபை உறுப்பினர்கள்  பலரும்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...