முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில்!

Date:

’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, முஸ்லிம் மீடியா போரத்தி தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி – உதவிப் பணிப்பாளர் ஜுனைட் எம். ஹாரிஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினார்கள்.

போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் , செயற்பாட்டு உறுப்பினர்களான ஆசிரியை சாமிலா, நளீர் ஜமால்தீன், உப செயலாளா் சாதீக் சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

மற்றும் கல்லூரி அதிபர் முல்லை முஸ்ரிபாவின் ஏற்பாட்டில், நடைபெற்ற இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறைத் தலைவா் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரம் பொறுப்பாளர் கௌன்சிலா் பானூ பிரகாஷ், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனா்.
அல்ஹிக்மா , அல்ஹிதாயா பாடசாலைகளின் சிரேஸ்ட ,கனிஸ்ட மாணவ மாணவிகள் 125 பேர் கலந்து கொண்டனர்..

இவா்களுக்கு பத்திரிகை , இலத்திரணியல், சமூக வலைத்தளங்கள் பற்றிய செயல்முறை பயிற்சிகளும் விரிவுரையாளா்களனிால் வழங்கப்பட்டு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...