அடிப்படை உரிமைகளை மீறாதீர்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Date:

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இன்று நவம்பர் 2 ஆம் திகதி நடைபெறும் அமைதிப் பேரணிக்கு அனுமதி பெறுமாறு பொலிசார் முறையற்ற விதத்தில் அறிவுறுத்தியதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமை ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் மிக உயர்ந்த சட்டம் என்றும், அடிப்படை உரிமைகளை மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துக்காட்டியது.

மேலும் அந்த அறிக்கையில், பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அக்டோபர் 28 அன்று மனித உரிமை ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மீது காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கூறப்பட்டுள்ளது.

இந்த பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு  அதிகாரிகள் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...