ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர்களின் முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.