ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரின் கொலையை விசாரிக்க 3 பொலிஸ் குழுக்கள்!

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக விடுவிக்கப்பட்ட மொஹமட் பரஹதம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டமைக்கான உண்மைகளை கண்டறிய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த நபரை வெட்டிய நபர்கள் மற்றும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய வாகனம் போன்றவற்றை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் இந்த விசாரணைகளின் போது மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜா-எல பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உயிரிழந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, 2 டெட்டனேட்டர்கள், 1 கிலோ அமோனியா, 2 ஜெலக்னைட் மற்றும் இராணுவ சீருடைக்கு நிகரான இரண்டு சீருடைகள் ஆகியவற்றை குழுவினர் கண்டுபிடித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று தமக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என குற்றம் சுமத்தப்பட்ட ஐவரில் மூவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மூவரில் உயிரிழந்தவர் ஒருவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பணமோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 28ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகியிருந்தார்.

இதனையடுத்து விசாரணை முடிந்த பின்னர் தனது காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
அவர் ஓட்டிச் சென்ற காருக்குப் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முன்பக்க காரை  நோக்கித் திருப்பி மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து என்னவென்று பார்ப்பதற்காக முன்பக்க காரில் இருந்தவர் காரை விட்டு இறங்கியதுடன் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்குளி பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...