போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளுக்கு அவர்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோரின் இயலாமையின் விளைவாக அவர்களுக்கு ‘வளர்ப்பு பெற்றோர்’ அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணை நவம்பர் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 21,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இதன் விளைவாக, 40,000 எடை குறைவான குழந்தைகளைக் கொண்ட இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் முயற்சியை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்த திட்டத்திற்கு இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமும், இந்திய நிறுவனமும் தலா ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் ஒதுக்கிய 500 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக எனவும் கூறப்படுகிறது.