கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பு!

Date:

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு காகித தாள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மருந்து விநியோகம் செய்ய பேப்பர் கவர்கள் இல்லை என்று மருத்துவமனையில் அறிவிப்பு பலகையில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை E.C.G ஐ சேகரிக்க போதுமான காகித நாடாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...