காதிகளாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

Date:

காதி நீதிபதிகளாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சட்டத்தரணி நுஸ்ரா சாரூக் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து இரண்டு முஸ்லிம் பெண்களால் குறித்த இருபதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமான வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டஅடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்ட தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது காதிகளாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் மௌலவிகள், மற்றும் ஆண் சட்டத்தரணிகள், பட்டதாரிகள், நியமிக்கப்படுகின்றதாகவும்  இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என சில பெண்கள் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை உச்சச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதேவேளை, நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தது.

பரிசீலனையின் பின்னர், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது நிராகரிப்பதாக குறித்த நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

காதி நீதிபதிகளாக பெண்களுக்கு விண்ணப்பிக்க உள்ள தடையை நீக்கி உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்த இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக நீதிச் சேவை ஆணைக் குழுவின் தலைவர், அதன் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு ஏற்காது நிராகரித்தது.

தற்போது தடைமுறையில் இருக்கும் (MMDA) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் பெண்களுக்கு காதிகளாக நியமிக்கும் வாய்ப்பு சட்ட ரீதியாக இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...