குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண விமான நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வந்த பின்னர் குரங்கு அம்மை நோய் என சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் மற்றும் சிக்குன் குனியாவை விட குரங்கு அம்மை வைரஸ் தொற்று வீதம் குறைவாக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.