பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதவான், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.