துறைமுகத்தில் இருந்து பால் மாவை, விநியோகிக்க சுங்கத் திணைக்களம் தடை?

Date:

பாரிய தொகை பால் மாவை, துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற, சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பால் உணவு இறக்குமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், லக்ஷ்மன் வீரசூரியவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விரைவில் வெளியிடப்படும் விபரங்கள் எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த சுங்கத் துறையினர், விசாரணையின் காரணமாக பால் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, சுங்கம் மற்றும் துறைமுகம் ஆகியவை சட்டவிரோதமாக பால் மா கையிருப்புகளை தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் நாட்டில் பால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் வீரசூரிய குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை சுங்கத்திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இறக்குமதி 50 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா காலாவதியானதன் பின்னர் கால்நடைகளுக்கான தீவனமாக வழங்கப்படுகின்றது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...