பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிகமாக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு பிரிவினருக்கு மதிய உணவு வழங்கப்படுவதாகவும், நிதியத்தை நிறுவி அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முழு நாட்டிலும் பாடசாலை மாணவர்கள் உணவுப் பிரச்சினையை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மதிய உணவை தாமதமின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் அரசாங்க செலவினத்தை அதிகரித்துள்ளதால்இ இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பணத்தை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.