பெற்றோர் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்கள் உணவை குறைக்கின்றனர்!

Date:

இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

தங்கள் பிள்ளைகளிற்கு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளமை, வேலை இழப்புகள், வருமானம் குறைந்துள்ளமை ஆகியன மில்லியன் கணக்கான மக்களிற்கு சத்தான உணவு கிடைப்பது சாத்தியமற்றதாக்கிவருகின்றன.

பிரான்ஸ் தக்க தருணத்தில் வழங்கியுள்ள இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் சிறுவர்கள் மந்தபோசாக்கிலிருந்து விடுபடுவதற்கு இந்த உதவி உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பகுதிகளில் சிறுவர்களை சென்றடைவதற்காக உலக உணவு திட்டம் குழந்தை நல மருத்துவர்களின் கல்லூரியுடன் இணைந்து செயற்படும், எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...