ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ கருத்து வெளியிட்டார்.
சுகாதார அமைச்சின் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான சிரேஷ்ட பதிவாளராக கடமையாற்றிய வைத்தியர் சமில் சஞ்சீவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கணக்கெடுப்பின் போது வெளிப்படுத்திய தகவலை வெளியிட்டார்.
இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்னை வேலையில் இருந்து இடைநிறுத்துவது அல்ல, உண்மைகளைப் பார்த்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.