முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக நிறுவப்பட்ட தொழுகை அறை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் விஷேட அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
பேராசிரியர் வித்யஜோதி ரிஸ்வி ஷரீப் அவர்களின் தாராள நன்கொடை அடிப்படையில் குறித்த தொழுகை அறை நிர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், தேசிய மனநல நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பேராசிரியர் வித்யஜோதி ரிஸ்வி ஷரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட கொஹிலவத்த பள்ளிவாயல் நம்பிக்கை சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த தொழுகை அறையின் பராமரிப்பு விடயம் கொஹிலவத்த பள்ளிவாயல் நம்பிக்கை சபை உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.