2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உள்ளடக்கங்கள் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தை யார் முன்வைக்கின்றார் என்பது முக்கியம் அல்ல அதில் உள்ள விடயங்கள்தான் பிரதானம்.
அந்தவகையில் வரவு – செலவுத் திட்டதில் உள்ளடக்கங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடிய விடயம் இருந்தால் நிச்சயம் ஆதரிப்பதோடு ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால்தான் தோட்ட நிர்வாகத்துக்கு துணிவு பிறக்கின்றது எனவே தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.