‘வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம்’

Date:

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதேநேரம் உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய குழு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் காணப்படுகின்றது, எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சித் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும், அல்லது பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயம் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...