ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 30 ஆவது பேராளர் மாநாடு: தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு!

Date:

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 30ஆவது பேராளர் மாநாடு நேற்று(7) புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், மாநாடு இரு அமர்வுகளாகவும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு தலைமை வகித்த முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு, முஸ்லிம்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வான மாணவர் பொல்லடி சகிதம் வரவேற்வளிக்கப்பட்டது.

மாநாட்டில் சர்ச்சைக்குரிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். பைஸால் காசிம், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பதவி இடைநிறுத்தப்பட்ட மற்றய நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசிம் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டன.

நேற்றைய கட்டாய உயர்பீடக் கூட்ட முடிவின்படி கட்சியின் புதிய நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டோரின் விபகரங்களை மாநாட்டின் முதலாவது அமர்வின் போது தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

இதன்படி கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம், செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தவிசாளராக முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத், தேசிய அமைப்பாளராக எம்.எஸ். தௌபீக், பொருளாளராக எம். பைஸால் காசிம், பிரதி தேசிய அமைப்பாளராக எம்.எஸ். உதுமாலெவ்வை, மூத்த பிரதித் தலைவராக எம்.ஐ.எம். மன்சூர், பிரதித்தலைவராக அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட உயர்பீட உறுப்பினர்களது நியமனமும் இதன் போது அறிவிக்கப்பட்டது.

பேராளர் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரவேசிக்க கட்சி ஆதரவாளர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப்படாதமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...