32 வருட வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் கொழும்புக்கு நடைபவனி!

Date:

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 32 வருடங்களாக தமக்கான நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து நீண்டகாலம் காத்திருந்த நிலையில், தற்போது தமது பிரச்சினையை உரியவர்களிடம் நேரடியாக சொல்லும் நோக்கில் வடக்கிலிருந்து இரண்டு முஸ்லிம்கள் கால் நடையாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையை நோக்கி கால்நடையாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அஸன் குத்தூஸ், ஜார்தீன் ஆகிய இருவர் இந்த நடை பவனியை மேற்கொண்டுள்ளனர்.

2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி சங்குப்பிட்டி மன்னார் பாதையில் அமைந்துள்ள நாச்சிக்குடா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் தற்போது நொச்சியாகம நகரை அண்மித்துள்ளனர்.

கொழும்பு வரை உள்ள வடமாகாண முஸ்லிம்களும் இவர்களுடைய பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் தமிழ், சிங்கள செயற்பாட்டாளர்களும், இக்கால்நடை பவனிக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள்.

முழுமையான தீர்வை எட்டும் வகையில் ஆணைக்குழு அமைத்தல், மீள்குடியேற்றம், நஷ்டஈடு, கல்வி, வளக்கட்டமைப்பு அபிவிருத்திகள், உரிமைகள், எல்லை நிர்ணய மோசடியாளர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந் நடைபவனி மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பான கட்சிகள்…

தகவல்: பாரூக் பத்தீன்,
சமூக செயற்பாட்டாளர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...