53 நாட்களாக கடலில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்!

Date:

(File Photo)
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு இன்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், அதே 53 வருட காலப்பகுதியில் மசகு எண்ணெய் கப்பல், எண்ணெய் தரையிறக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும்  பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக 79 இலட்சம் டொலர்களுக்கு மேல் அதிகளவில் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ரஷ்ய நிறுவனமான ‘எக்போ’ நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், மசகு எண்ணெய் இறக்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கப்பலில் 99,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...