9’A’ சித்தி பெற்ற மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!

Date:

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ‘9 A’ சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான ஒருவரால் தீ வைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி,  சனிக்கிழமை (26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிய போது  சந்தேக நபரால் தீ வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றப் பின்னணி கொண்டவர் என தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...