கொழும்பில் பெண்களுக்கான ரக்பி போட்டிக்கு பாகிஸ்தான் அனுசரணை வழங்குகிறது!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் அபிவிருத்தியினால் ரக்பி போட்டியில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி சம்பியனாகியது.

அதேநேரம், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி இரண்டாம் இடத்தையும், சப்ரகமுவ பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.

குறிப்பாக அந்த மாவட்டங்கள் தங்களது திறமையான வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட காலங்களில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மாவட்ட மட்டத்தில் ரக்பி போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியது.

பிராந்தியத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் நட்பு நாடுகளின் இளைஞர்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் மொத்தம் எட்டு பெண்கள் அணிகள் பங்கேற்றன. இதற்கு முன்னர் கண்டி, காலி மற்றும் கொழும்புவில் மூன்று போட்டிகள் நடைபெற்றன.

அதற்கமைய மொத்தம் நான்கு ரக்பி போட்டிகளில் இறுதிச் சுற்று கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...