தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மாத்திரமன்றி அவரது மனைவியும் கோட்டாபய ராஜபக்சவை அழைத்து சஜித்தை பிரதமராக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்சவிடம் இது தொடர்பில் பகிர்ந்துகொண்டார்.
மேலும் சஜித்தை தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என சஜித்தை எச்சரித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரத் தொடங்கும் போது, மீண்டும் கொழும்பில் இருந்து கண்டி வரை எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்வதாக டயானா கமகே கேட்டுக்கொண்டார்.
இந்த நாட்டைக் காப்பாற்றும் முயற்சிகளை நாசப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள், மீண்டும் பேரணிக்கு தயாராகி மக்களைத் தூண்டிவிட்டு தமது இயலாமையைக் காட்ட முயற்சிக்கின்றனர் என டயானா எச்சரித்தார்.