ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரூட் பஹோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (நவம்பர் 7) இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்லோவேனியா ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
COP-27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக .ரணில் விக்கிரமசிங்க எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் சென்றுள்ளதாகவும், அங்கு சந்திப்பு இடம்பெற்றதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஜனாதிபதி மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.