சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் பாராளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆதரிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை நவம்பர் மாதம் ஆதரிப்பதற்காக ஒத்திவைத்தது.
டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும், அதனால் அவர் எம்.பியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என்று உத்தரவிடுமாறு கோரி சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹபீல் ஃபாரிஸ் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.