‘டேட்டா’ கட்டணங்கள் அதிகரிப்பால் மக்களுக்கு பெரும் பாதிப்பு: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Date:

கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இன்று பலர் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாடல்களை கேட்கிறார்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டேட்டா  மூலம் கல்வியைப் பெறுகிறார்கள் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே கையடக்க தொலைபேசி கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு ஊடகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...