நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் ‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நூல்வெளியீட்டு விழா திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கலாநிதி ஜலால்தீன் கரீம்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பரீனா ருஷைக், மற்றும் உளவியல் ஆலோசகர் அஸ்மியாஸ் சஹீட் அவர்களும் நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்கள்.