தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்த நுவர பிரதேசங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வான்கதவுகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் எனினும் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.