‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் யாதாமினி குணவர்தன தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மருதானையிலிருந்து புகையிரதத்தில் செல்வதாகத் தெரிவித்த குணவர்தன, தற்போது 120 ரூபா வழக்கமாக அறவிடுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது 165 ஆண்டுகள் பழமையான ரயில்வே துறையை தவறான பாதையில் செல்லாமல் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களத்தில் உள்ள திறமைசாலிகள் பலர் கூறுவதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.