பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வடக்கு பயணம்: பல்வேறு உதவித் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வைத்தார்!

Date:

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி முதன் முதலாக இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மன்னாரில் பதினைந்து குடிநீர் வசதிகளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்த குடிநீர் கிணறு திட்டம் பாகிஸ்தான் அரசின் சார்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால் இலங்கையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தினால் முன்பள்ளி பாடசாலை, மற்றும் பள்ளிவாசல் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இந்த குடிநீர் கிணறுகள் அதிகளவில் தேவைப்படுவதாக அமைகின்றது.

இதேவேளை மேலும், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மன்னாரில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கி வைத்தார்.

இதன்போது தொடக்கத்தில் பெரிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களைப் போன்று தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன்களைப் படிக்கும் சம வாய்ப்புகள் தங்கள் மாணவர்களுக்கு கிடைக்காததால் இந்த உதவிக்காக பாடசாலை அதிபர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் உள்ள தகுதியான பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளுக்காக தையல் இயந்திரங்களையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வழங்கி வைத்தார்.

இதற்கிடையில்,  யாழ்ப்பாணத்தின் மேயர் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலின் இமாம் ஆகியோரை உயர்ஸ்தானிகர் நேரில் சந்தித்து பேசினார்.

இதன்போது, பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் அவர்களின் அன்பான விருந்தோம்பலுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து கிளிநொச்சி கட்டளைத் தளபதி மற்றும் 54ஆவது இராணுவத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியையும் மரியாதையுடன் சந்தித்தார்.

இலங்கை இராணுவத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் தங்களின் மரியாதைக்குரிய அதிகாரிகளை அன்புடன் வரவேற்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ சிவில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அரங்கங்களை உள்ளடக்கிய சந்திப்புகளின் போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வட மாகாணத்திற்கான ஒரு வார கால நீண்ட கன்னி சுற்றுப்பயணம், அதன் பன்முக ஈடுபாடுகள் மற்றும் அந்த பிராந்தியத்தின் உள்ளூர் சமூக சிவில் மற்றும் இராணுவத் தலைமையிடமிருந்து பெறப்பட்ட பதிலின் காரணமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாலினம், வயது அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் நல்லெண்ண நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக இலங்கை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...