வடக்கு முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி நடை பவனி: ரவூப் ஹக்கீம் ஆதரவு!

Date:

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாகியுள்ள நிலையில், கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் ‘எமது உரிமை மீட்புப் போராட்டம்’ என்னும் தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடை பவனி கடந்த மாதம் 26 ஆம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடாவில் இருந்து ஆரம்பமாகி புத்தளத்தை வந்தடைந்தது.

இடம் பெயர்ந்த மக்களுடன் உள்ளூர் மக்களும் இந் நடை பவனிக்கு மகத்தான வரவேற்பு வழங்கினர்.

பேராளர் மாநாட்டுக்கு வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் நடை பவனி குழுவினரை சந்தித்தார்.

இன்று காலை 9.00 மணியளவில் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் நோக்கிய நடை பவனியை போராட்டக் குழுவினர் மீண்டும் முன்னெடுத்தனர்.

32 வருடங்களாகியும் தமக்கான மீள்குடியேற்றம் துரித கதியில் இடம்பெறவில்லை எனவும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் இந் நிலையில் ஜனாதிபதி ஆனணக் குழு ஒன்று இதற்காக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடை பவணி கொழும்பு வரை சென்று ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக “நாச்சிக்குடா முஸ்லிம் அமைப்பு” தெரிவித்துள்ளது.

தகவல்:முஹம்மத் காசிம், புத்தளம்

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...