‘அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருக்க அல்ல, தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம்’ :பாக். அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Date:

பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை கசாப்புக் கடைக்காரர் என குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கு இது ஒரு புதிய தாழ்வு எனவும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மேக் இன் பாகிஸ்தான் திட்டத்தை நிறுத்திகொள்ள வேண்டும் எனவும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஷாஜியா மாரி “பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது, அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருப்பதற்காக அல்ல, தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் கூறினர்.

எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...