இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று!

Date:

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த முதலாம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ஓட்டங்களும், பாகிஸ்தான் 579 ஓட்டங்களும் எடுத்தன . அடுத்து 78 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்களுடன் தொடரை முடித்தது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்குகிறது. முல்தானில் டெஸ்ட் போட்டி நடப்பது 16 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் அணி முயற்சிக்கும்.

அதே வேளையில் இந்த டெஸ்டில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணியினர் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...