இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “மெண்டஸ்” புயல் நேற்று (09) இரவு 08.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வட-வடகிழக்கே 280km தொலைவில் 12.2N அகலாங்கு மற்றும் 80.6E நெடுங்கோட்டுக்கு அருகில் நிலைகொண்டது.

வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலையில் கடக்க வாய்ப்புள்ளது. இதன்படி தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் வானிலையில் “மெண்டஸ்” புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...