உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்று கொண்டு வரப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பில் ஒன்றிணைந்த பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.