டிசம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருட கிறிஸ்மஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை (25) வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆளுநர் மாநாட்டின் போதே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
முன்னதாக திங்கள்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.