சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சார அமைச்சு மீண்டும் சமர்ப்பிப்பு!

Date:

சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சார அமைச்சு மீண்டும் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு செயலாளரின் ஆலோசனையின் பேரில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது என தெரிவித்த ஜனக ரத்நாயக்க, இந்த தீர்மானத்தை மின்சார அமைச்சு மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அனுமதி பெற்று அதனை எதிர்கொள்வதற்கான வழியை மின்சார சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின்சார அமைச்சினால் தேவைக்கேற்ப மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என தெரிவித்த ஜனக ரத்நாயக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எப்போதும் பொதுமக்களின் பக்கம் இருந்து தீர்மானங்களை எடுப்பதாகவும், அவர்கள் ஒடுக்கப்படும் வகையில் செயற்படுவதில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...