சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Date:

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்–நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் ஆனார்.

தற்போது துபாயில் உள்ள இவர், வரும் ஜன. 1 முதல் இந்த அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1793 கோடி தர முன்வந்துள்ளது அணி நிர்வாகம். இதையடுத்து ரொனால்டோவின் மாத சம்பளம் ரூ. 149 கோடியாக இருக்கும். வார சம்பளம் ரூ. 34.5 கோடி வரை கிடைக்கும்.

வரும் 2030ல் உலக கோப்பை கால்பந்து தொடரை சொந்த மண்ணில் நடந்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...