சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை ஜனவரி 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தீர்மானித்துள்ளது.