வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில்…!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். மஹவத்த  இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பிணையில் விடுவிக்குமாறு கடந்த 23ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம்  காலிமுகத்திடல் போராட்ட சம்பவம் தொடர்பில் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...