தலைமன்னார் துறைமுகம் குறித்து இந்தியாவுடன் பேசுமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Date:

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தியாவுடன், இதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடிய போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றது.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மினி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து, இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...