பிரபல தொழிலதிபர் கொலை: 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்ப்பு!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5 பொலிஸார் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர,  ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களின் ஆதரவுடன் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் கிடைத்த சில தகவல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழன் பொரளை மயானத்திற்கு அருகில் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்ட சம்பவம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...