முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக் விலை அதிகரிப்பு

Date:

உள்ளூர் சந்தையில் முட்டை தட்டுப்பாடு காரணமாக  நத்தார் காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

சந்தையில் முட்டை ஒன்றின் விலை சுமார் 70 ஆக அதிகரித்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

முட்டை விலை கணிசமான அளவு உயர்ந்தாலும் சந்தையில் முட்டையை காண முடியவில்லை. சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்த மாஃபியா உருவாகியுள்ளது.

எனவே விலைவாசி உயர்வால், மக்கள் கேக் வாங்க கடைகளுக்கு வருவதில்லை, பேக்கரிகளில் கூட கேக்குகளுக்கு வெண்ணெய் பயன்படுத்த முடியாது.

வெண்ணெய் பயன்படுத்தினால், ஒரு கிலோ கேக் விலை, 3,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றார்.

சந்தையில் முட்டை விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து நுகர்வோரை நிம்மதி அடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...