‘இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை’

Date:

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...